சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

கார்பன் வெளியேற்றத்தை குறைக்க தொழிற்சாலைகளின் தன்னார்வ பங்கேற்பு முக்கியம்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தல்

Posted On: 01 DEC 2020 5:46PM by PIB Chennai

‘‘கார்பன் வெளியேற்றத்தை குறைக்க, தொழிற்சாலைகளின் தன்னார்வ பங்கேற்பு முக்கியம்’’ என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

கார்பன் அளவை குறைப்பது குறித்த தொழில்துறை தலைவர்கள் மாநாட்டில் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் பேசியதாவது:

உலகளாவிய கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றத்தில், தொழிற்சாலைகளின்  நேரடி பங்கு 30 சதவீதமாக உள்ளதுபருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராட, கார்பன் அளவை குறைப்பதை நோக்கி தொழிற்சாலைகள் மாற வேண்டியது முக்கியம்.

பல முன்னணி தொழிற்சாலைகள் தானாக முன்வந்து, கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை குறைக்கின்றன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நாட்டில் பல நிறுவனங்கள் ஊக்குவித்து வருகின்றன. கார்பன் அளவை குறைப்பதில், தொழிற்சாலைகளின் தன்னார்வ பங்களிப்பை நாம் ஊக்குவிக்க வேண்டும்.

பருவநிலை மாற்ற பிரச்னைகளை எதிர்கொள்ள நாம் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இதற்கு மிகப் பெரிய அளவில் நிதி திரட்டப்பட வேண்டும். வளரும் நாடுகளுடன் மலிவான தொழில்நுட்பங்கள், மற்றும் ஆராய்ச்சிகள்  பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பணியாற்ற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677417

-----



(Release ID: 1677534) Visitor Counter : 209