மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

இந்திய அரசியலமைப்பில் உள்ளபடி இட ஒதுக்கீடு கொள்கையை தேசிய கல்வி கொள்கை 2020 ஆதரிக்கிறது - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம்

प्रविष्टि तिथि: 01 DEC 2020 3:45PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்பில் உள்ளபடிஇட ஒதுக்கீடு கொள்கையை, தேசிய கல்வி கொள்கை 2020 ஆதரிக்கிறது என மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெளிவுபடுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இந்திய அரசியலமைப்பில் கூறியுள்ளபடி இடஒதுக்கீடு கொள்கையை, தேசிய  கல்வி கொள்கை 2020, ஆதரிக்குமா என்ற சந்தேகத்தை கடந்த நவம்பர் 24ம் தேதி வெளியான ஊடக தகவல்கள் எழுப்பின.

இது குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். இட ஒதுக்கீடு கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்ற எந்த நோக்கமும் இல்லை. இந்திய அரசியலபை்பில் கூறியுள்ள இடஒதுக்கீட்டை தேசிய கல்வி கொள்கை உறுதி செய்கிறதுஇதை மீண்டும் வலியுறுத்த தேவையில்லை என நினைக்கிறேன்.

தேசிய கல்வி கொள்கை 2020 அறிவிக்கப்பட்ட பின்புதான், ஜேஇஇ, நீட், யுஜிசி-நெட், இக்னோ நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டன. கல்வி நிறுவனங்களில் பல நியமனங்கள் நடந்தன. ஆனால், இதுவரை இட ஒதுக்கீடு தொடர்பாக ஒரு புகார் கூட வரவில்லை.

தேசிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டு நான்கு, ஐந்து மாதங்களுக்கு பின்பு, எந்த ஆதாரமும் இல்லாமல் இந்த சந்தேகம் எழுப்புவதன் அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியவில்லை

அனைத்து திட்டங்களும், கொள்கைகளும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் சமூக பொருளாதாரத்தின் பின்தங்கியுள்ள இதர பிரிவினரையும் உள்ளடக்கும் புதிய முயற்சிகளுடன் தொடரும் என நான் வலியறுத்தி கூறுகிறேன்.

இது தொடர்பாக எந்த புகார், வந்தால், அதற்கு எனது அமைச்சகம் தகுந்த நடவடிக்கை எடுக்கும்.

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களுடன் ஆலோசித்துதான் தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

----


(रिलीज़ आईडी: 1677463) आगंतुक पटल : 200
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Telugu , Kannada