பிரதமர் அலுவலகம்

புனேயில் கொவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்கி வரும் சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியாவை பிரதமர் பார்வையிட்டார்

Posted On: 28 NOV 2020 6:47PM by PIB Chennai

கொவிட் தடுப்பு மருந்து மேம்பாடு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்வதற்கான தம்முடைய மூன்று நகர பயணத்தின் ஒரு பகுதியாக, புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியாவை  பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டு, அங்கிருந்த குழுவினருடன் உரையாடினார்.

தடுப்பு மருந்து தயாரிப்பில் இதுவரையிலான முன்னேற்றம் குறித்தும், உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டம் குறித்தும் பிரதமரிடம் அவர்கள் விவரித்தார்கள்.

"சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியாவின் குழுவினருடன் நல்லதொரு உரையாடலை நடத்தினேன். தடுப்பு மருந்து தயாரிப்பில் இதுவரையிலான முன்னேற்றம் குறித்தும், உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டம் குறித்தும் அவர்கள் விளக்கினார்கள். அவர்களது தயாரிப்பு மையத்தையும் பார்வையிட்டேன்," என்று டிவிட்டர் பதிவொன்றில் திரு மோடி கூறியுள்ளார்.

------


(Release ID: 1676851) Visitor Counter : 136