உள்துறை அமைச்சகம்

கொவிட் கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கைக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள்

Posted On: 25 NOV 2020 4:03PM by PIB Chennai

2020 டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை அமலில் இருக்கப்போகும் கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கைக்கான வழிகாட்டுதல்கள் குறித்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

கொவிட்-19 பாதிப்புகள் நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பெருந்தொற்றின் பரவலுக்கு எதிராக அடைந்துள்ள பலன்களை தக்கவைத்துக் கொள்வதே இந்த வழிகாட்டுதல்களின் நோக்கமாகும். சில மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய பண்டிகைக் காலம் மற்றும் குளிர்காலத்தை கருத்தில் கொண்டு பெருந்தொற்றை எதிர்கொள்வதற்காக இந்த வழிகாட்டுதல்கள் வெளியிட்டப்பட்டுள்ளன.

கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு:

* மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு, கட்டுப்பாட்டு பகுதிகள் மாவட்ட அதிகாரிகளால் கவனமுடன் வரையறுக்கப்படுவதை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்ய வேண்டும்.

* இந்தக் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

* இதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழுக்களின் மூலம் அனைத்து வீடுகளும் கண்காணிக்கப்படும், பரிசோதனைகள் நடத்தப்படும்.

* கொவிட்-19 நோயாளிகள் விரைந்து தனிமைப்படுத்தப்பட்டு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும்.

சரியான கொவிட் நடத்தைமுறை:

* சரியான கொவிட் நடத்தைமுறையை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்ய வேண்டும்.

* முகக்கவசங்கள் அணிதல், கைகளை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், சமூக இடைவெளி ஆகியவை கண்காணிக்கப்பட்டு விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றுதல்:

கட்டுப்பாடுப் பகுதிகளுக்கு வெளியே கீழ்கண்ட நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும்

* மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ளவாறு சர்வதேச விமான பயணம்

* 50 சதவீதம் கொள்ளளவுடன் திரையரங்குகள்

* விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக நீச்சல் குளங்கள்

* வர்த்தக நோக்கங்களுக்காக கண்காட்சி அரங்குகள்

* அரங்கத்தின் 50 சதவீத கொள்ளளவுடன், 200 பேருக்கு மிகாமல் சமுக/ஆன்மிக/விளையாட்டு/பொழுதுபோக்கு/கல்வி/கலாச்சார/மதம் சார்ந்த கூட்டங்கள்

பயணக் கட்டுப்பாடுகள்:

மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களிடையேயான போக்குவரத்துக்கு எவ்வித தடையும் இல்லை. எந்த தனிப்பட்ட அனுமதியும் தேவையில்லை.

ஆரோக்கிய சேது:

ஆரோக்கிய சேது செயலியின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675624

 

*******************



(Release ID: 1675725) Visitor Counter : 249