மத்திய அமைச்சரவை

லட்சுமி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 25 NOV 2020 3:33PM by PIB Chennai

வங்கிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் டிபிஎஸ் வங்கியுடன் லட்சுமி விலாஸ் வங்கியை இணைப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் மூலம், குறிப்பிட்ட தேதியில் டிபிஎஸ் வங்கியுடன் லட்சுமி விலாஸ் வங்கி இணைக்கப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வைப்புத்தொகையை திரும்பப் பெறுவதற்கு எந்தக் கட்டுப்பாடும் இருக்காது.

2020 நவம்பர் 17 அன்றுமுதலீட்டாளர்கள்  நலனை உறுதி செய்யும் நோக்கிலும், வங்கியியல் நிலைத்தன்மையைப் பாதுகாக்கும் வகையிலும், 30 நாட்கள் தடைக்காலத்தை லட்சுமி விலாஸ் வங்கியின் மீது இந்திய ரிசர்வ் வங்கி விதித்தது.

விரைவான இணைப்பு, லட்சுமி விலாஸ் வங்கியின் சிக்கலுக்கான தீர்வு ஆகியவை, முதலீட்டாளர்கள், பொதுமக்கள் மற்றும் நிதி அமைப்பின் நலனைப் பாதுகாக்கும் அதே சமயத்தில் தூய்மையான வங்கி அமைப்பை வழங்குவதற்கான அரசின் உறுதியோடு ஒத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675604

*******************


(रिलीज़ आईडी: 1675654) आगंतुक पटल : 208
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam