பிரதமர் அலுவலகம்

ஜி20 தலைவர்களின் 15வது உச்சிமாநாடு

Posted On: 21 NOV 2020 10:35PM by PIB Chennai

சவுதி அரேபியா, நவம்பர் 21-22 ஆகிய தேதிகளில் கூட்டிய 15வது ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.  19 உறுப்பு நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் மற்றும் அழைப்பு விடுக்கப்பட்ட இதர நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கலந்து கொண்ட இந்த உச்சிமாநாடு, கொவிட்-19 தொற்று காரணமாக காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது.

 

2. கொவிட்-19 தொற்று சாவல்கள் மற்றும் தடைகளுக்கு இடையே இந்தாண்டு ஜி20 மாநாட்டுக்கு வெற்றிகரமாக தலைமை தாங்கியதற்கும், 2020-ல் இரண்டாவது ஜி20 உச்சிமாநாட்டை காணொலிக் காட்சி மூலம் நடத்தியதற்கும் சவுதி அரேபியா மற்றும் அதன் தலைமைக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

 

3. சவுதி தலைமையில் நடந்த இந்த உச்சி மாநாடு, ‘‘அனைவருக்குமான 21ம் நூற்றாண்டின் வாய்ப்புகளை உணர்ந்து கொள்வது’’ என்ற கருப் பொருளை மையமாக கொண்டு நடந்தது. இது கொவிட் தொற்று நேரத்தில் அதிக முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.  இரண்டு நாட்களாக, இரண்டு அமர்வுகளுடன் நடந்த இந்த மாநாட்டின் கொள்கை, கொரோனா தொற்றை முறியடிப்பது, பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பை மீட்பது மற்றும் அனைத்தும் உள்ளடங்கிய, நிலையான, மீளக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவது ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.  இந்த 2 நாள் மாநாட்டுக்கு இடையே கொவிட் தயார்நிலை மற்றும் பூமியைப் பாதுகாப்பது பற்றிய நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிடப்பட்டது. 

 

4. மனித வரலாற்றில் கொவிட்-19 தொற்று, முக்கியமான திருப்புமுனை என்றும், 2ம் உலகப் போருக்குப்பின், உலகம் சந்தித்த மிகப் பெரிய சவால் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.  ஜி20 அமைப்பின் உறுதியான நடவடிக்கை, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வர்த்தகம் ஆகியவற்றை மீட்போதோடு நின்று விடாமல், பூமியை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.  நாம் அனைவரும் எதிர்காலத்தின் நம்பிக்கையைப் பெற்றவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

 

5. கொரோனாவுக்குப் பிந்தைய உலகிற்கான, புதிய உலகளாவிய பட்டியலை  தயாரிக்க வேண்டும் எனவும், அதில் திறமையானவர்களை பரந்தளவில் உருவாக்குதல், சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் தொழில்நுட்பம் சென்றடைவதை உறுதி செய்தல், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பூமியை பாதுகாப்பது என்ற 4 முக்கிய அம்சங்கள் இடம் பெற வேண்டும் எனவும் பிரதமர் அழைப்பு விடுத்தார். இதன் அடிப்படையில், புதிய உலகுக்கான அடித்தளத்தை அமைக்க முடியும் என பிரதமர் கூறினார்.

 

6. கடந்த சில தசாப்தங்களாக, முதலீடு மற்றும் நிதியில்தான் கவனம் செலுத்தப்பட்டது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர்திறமையான மனித சக்தியை பரந்த அளவில் உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது என்றார்.  இது மக்களின் கவுரவத்தை மட்டும் உயர்த்தாமல், நெருக்கடிகளை சந்திக்கும் சக்தியையும் அளிக்கும் என்றார்.  புதிய தொழில்நுட்பத்தின் மீதான மதிப்பீடு, வாழ்க்கையை எளிதாக்குவது மற்றும் மேம்படுத்துவது அடிப்படையில் இருக்க வேண்டும் என அவர் கூறினார்.

 

7. ஆட்சி நிர்வாகத்தில் மிகுந்த வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் எனவும், இது சவால்களை எதிர்கொள்ள மக்களை ஊக்குவிக்கும் மற்றும் அவர்களின்   நம்பிக்கையை அதிகரிக்கும் எனவும் அவர் கூறினார்.  சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையை கையாள்வதில் உரிமையாளர் போல் செயல்படாமல், அறங்காவலர் போல் செயல்பட்டால், அது முழுமையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறைக்கும் நம்மை ஊக்குவிக்கும். இது கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் கொள்கையாக இருக்கும் என்றார். 

 

8. எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்றலாம், என்பது கொவிடுக்குப் பிந்தைய உலகில் ஏற்பட்டுள்ள புதிய இயல்பு நிலை.  இதனால் ஜி20 செயலகம் மற்றும் ஆவண களஞ்சியத்தை மெய்நிகர் முறையில் உருவாக்க பிரதமர் ஆலோசனை தெரிவித்தார்.

 

9. நவம்பர் 22ம் தேதி வரை தொடரும் 15வது ஜி20 தலைவர்களின் கூட்டம், தலைவர்களின் பிரகடனம், மற்றும் ஜி20 தலைமையை இத்தாலியிடம் சவுதி அரேபியா ஒப்படைப்பது போன்றவற்றுடன் நிறைவடையும். 

*******************(Release ID: 1674893) Visitor Counter : 573