சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மணிப்பூருக்கு உயர்நிலைக் குழு : மத்திய அரசு அனுப்புகிறது
प्रविष्टि तिथि:
19 NOV 2020 3:08PM by PIB Chennai
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு உயர்நிலைக் குழு செல்ல, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல் தினசரி உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் தேசிய தலைநகர் மண்டலத்திலும் காணப்படுகிறது. ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் தேசிய தலைநகர் மண்டலம் வருவதால் அங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது.
தில்லி எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவினர் ஹரியானா செல்கின்றனர். நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தலைமையிலான குழுவினர் ராஜஸ்தான் செல்கின்றனர். நோய் கட்டுப்பாடு தேசிய மையத்தின் (என்சிடிசி) இயக்குனர் டாக்டர் எஸ்.கே.சிங் தலைமையிலான குழு குஜராத் செல்கிறது. சுகாதார சேவை தலைமை இயக்குனரகத்தின் துணைத் தலைமை இயக்குனர் டாக்டர் ஸ்வஸ்திசரன் தலைமையிலான குழு மணிப்பூர் செல்கிறது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு உயர்நிலைக் குழுவினர் சென்று கொரோனா பரவல் தடுப்பு, கண்காணிப்பு, பரிசோதனை, கொரோனா மேலாண்மை ஆகியவற்றில் மாநிலங்களின் முயற்சிகளுக்கு உதவியாக செயல்படுவர். தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்குவர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674001
**********************
(रिलीज़ आईडी: 1674037)
आगंतुक पटल : 256