ஜல்சக்தி அமைச்சகம்
தூய்மை இந்தியா (ஊரக) இயக்கத்தின் கீழ், உலக கழிப்பறை தினம் நாளை அனுசரிப்பு
प्रविष्टि तिथि:
18 NOV 2020 5:59PM by PIB Chennai
மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் குடிநீர் மற்றும் சுகாதார துறை, நாளை, நவம்பர் 19, 2020 அன்று உலக கழிப்பறை தினத்தை கடைப்பிடிக்கிறது.
தூய்மை இந்தியா (ஊரக) இயக்கத்தின் கீழ் பாதுகாப்பான சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தூய்மை இந்தியாவை உருவாக்குவதில் சிறந்த பங்களிப்பை வழங்கிய மாவட்டங்கள்/ மாநிலங்களை கவுரவிக்கவும் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் இணை அமைச்சர் திரு ரத்தன் லால் கட்டாரியா ஆகியோர் நாளை (2020, நவம்பர் 19) நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முன்னணி மாவட்டங்கள்/ மாநிலங்களுக்கு காணொலி வாயிலாக விருதுகளை வழங்குவார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673772
**********************
(रिलीज़ आईडी: 1673849)
आगंतुक पटल : 208