குடியரசுத் தலைவர் செயலகம்

வேற்றுமையில் ஒற்றுமையை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் பிரதிபலிக்கிறது: குடியரசுத் தலைவர்

Posted On: 18 NOV 2020 4:15PM by PIB Chennai

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும்சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளில் இருந்தும் வரும் மாணவர்கள்சிறந்து விளங்குவதற்கான சம வாய்ப்பை அளிக்கும் சூழ்நிலையைக் கொண்ட ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்கள் என்று குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் இன்று கூறினார்.

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் நான்காவது பட்டமளிப்பு விழாவில், காணொலி மூலம் உரையாற்றிய குடியரசுத் தலைவர்ஒன்றிணைத்தல்பன்முகத்தன்மை, சிறந்து விளங்குதல் ஆகியவற்றை இந்த பல்கலைக்கழகம் பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

இந்தியக் கலாச்சாரத்தின் அனைத்து தடங்களும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிரதிபலிப்பதாகவும்அதன் வளாகத்தில் உள்ள கட்டிடங்கள்தங்கும் விடுதிகள்சாலைகள்இதர வசதிகளுக்கு இந்தியப் பாரம்பரியத்தில் இருந்து பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவின் கலாச்சாரபுவியியல் சிறப்புகளை இது பிரதிநிதித்துவப்படுத்துகிறதுஇந்த இந்தியத் தன்மைதான் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தனிச்சிறப்பாகும்அதை வலுப்படுத்துவது இந்தக் கல்வி நிறுவனத்தின் கடமையாகும் என்று திரு கோவிந்த் கூறினார்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சிறப்பு வாய்ந்த ஆசிரியர்கள், விவாதங்களையும்மாற்றுக் கருத்துகளையும் ஊக்குவிப்பதாக குடியரசுத் தலைவர் கூறினார்கற்றலின் பங்குதாரர்களாக மாணவர்கள் நடத்தப்படுகிறார்கள்உயர்கல்வி என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

வகுப்பறைகளுக்கு வெளியிலும்தேநீர் விடுதிகள்உணவகங்கள் ஆகிய இடங்களிலும் நடக்கும் துடிப்பான விவாதங்களுக்கு இந்த பல்கலைக்கழகம் புகழ் பெற்றது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் படிக்கவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673734

**********************


(Release ID: 1673752) Visitor Counter : 191