பிரதமர் அலுவலகம்
இந்திய-லக்சம்பர்க் காணொலி உச்சி மாநாடு
Posted On:
17 NOV 2020 8:06PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் லக்சம்பர்க் பிரதமர் மேன்மைமிகு திரு சேவியர் பெத்தேல் இடையேயான காணொலி உச்சி மாநாடு 2020 நவம்பர் 19 அன்று நடக்கவிருக்கிறது.
கடந்த இரு தசாப்தங்களில் இந்தியா மற்றும் லக்சம்பர்க்குக்கு இடையே நடக்கும் முதல் முழுமையான உச்சி மாநாடு இதுவேயாகும். கொவிட்டுக்கு பிந்தைய உலகத்தில் இந்தியா மற்றும் லக்சம்பர்க்குக்கிடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள். பரஸ்பர நலன் சார்ந்த சர்வதேச மற்றும் உலகளாவிய விஷயங்கள் குறித்தும் அவர்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்வார்கள்.
உயர்மட்ட அளவிலான கருத்து பரிமாற்றங்களை இந்தியாவும் லக்சம்பர்க்கும் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து நடத்தி வருகின்றன. இதற்கு முன் மூன்று முறை இரு நாடுகளின் பிரதமர்கள் சந்தித்திருக்கிறார்கள்.
----
(Release ID: 1673591)
Visitor Counter : 210
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam