பிரதமர் அலுவலகம்
புகழ்பெற்ற வங்கமொழி நடிகர் சவுமித்ரா சட்டர்ஜி மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
15 NOV 2020 3:25PM by PIB Chennai
புகழ்பெற்ற வங்கமொழி நடிகர் சவுமித்ரா சட்டர்ஜி மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் பிரதமர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘‘திரு சவுமித்ரா சட்டர்ஜியின் மரணம், உலக சினிமாவுக்கும், மேற்கு வங்கம் மற்றும் இந்திய கலாச்சார வாழ்வியலுக்கும் பெரும் இழப்பு. மேற்கு வங்க மக்களின் உணர்வுகள், பண்பாடு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை அவர் தனது பாத்திரப் படைப்புகள் மூலம் வெளிக்கொண்டு வந்தார். அவரது மறைவால் வேதனையடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், அபிமானிகளுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி’’ என குறிப்பிட்டுள்ளார்.
------
(வெளியீட்டு அடையாள எண்: 1673034)
வருகையாளர் எண்ணிக்கை : 219
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam