சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
37-வது நாள் : புதிய தொற்றுகளை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
Posted On:
09 NOV 2020 11:00AM by PIB Chennai
சரியான கொவிட் நடத்தை முறைகளை மக்கள் இயக்கம் (ஜன் அந்தோலன்) வெற்றிகரமாக ஊக்கப்படுத்தி வரும் காரணத்தால், புதிய தொற்றுகளை விட குணமாவோர் எண்ணிக்கை 37-வது நாளாக இந்தியாவில் அதிகமாக உள்ளது.
தொடர்ந்து இரண்டாம் நாளாக, இந்தியாவில் புதிதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 50,000-க்கும் குறைவாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45,903 நபர்களுக்கு கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 48,405 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். நாட்டின் தற்போதைய தொற்றுகளின் எண்ணிக்கை 5,09,673 ஆகும். மொத்த பாதிப்புகளில் இது 5.95 சதவீதம் மட்டுமே ஆகும்.
இது வரை 79,17,373 நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில், குணமடைதல் விகிதம் 92.56 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் மற்றும் தற்போது சிகிச்சையில் உள்ளோருக்கிடையேயான இடைவெளி 74,07,700 ஆகும்.
மத்திய மற்றும் மாநில/யூனியன் பிரதேச அரசுகளின் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக புதிய தொற்றுகளின் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இது வரை குணமடைந்துள்ளோரில் 79 சதவீதம் 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
புதிய பாதிப்புகளில் 79 சதவீதமும், 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 490 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் கொவிட் காரணமான உயிரிழப்புகளும் தொடர்ந்து குறைந்து வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671365
**********************
(Release ID: 1671382)
Visitor Counter : 231
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam