தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

இஎஸ்ஐசி-யின் ‘அடல் பீமித் வியாகிதி கல்யாண் திட்டத்தின்’ கீழ் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

प्रविष्टि तिथि: 08 NOV 2020 2:07PM by PIB Chennai

இஎஸ்ஐசி நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி நடத்திய கூட்டத்தில், வேலை இழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும்அடல் பீமித் வியாகிதி கல்யாண் திட்டம்’  01.07.2020 முதல் 30.06.2021ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதுஇத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணத்தை, தினசரி சராசரி வருவாய் 25% லிருந்து 50% சதவீதமாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டதுகொவிட் -19 பெருந் தொற்று காலத்தில் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான, தகுதி காலத்தை 24.03.2020 லிருந்து 31.12.2020 வரை தளர்த்தவும் முடிவு செய்யப்பட்டது

நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் மனு செய்வதற்காகபயனாளிகள் பல சிரமங்களை சந்திப்பது கண்டறியப்பட்டது. இதனால், ‘அடல் பீமித் வியாகிதி கல்யாண்  திட்டத்தின்பயனாளிகள், ஆன்லைன் மூலம்  மனுக்களையும், தேவையான ஆவணங்களையும் எளிதாக தாக்கல் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மனுத்தாக்கலின்போது ஆதார், வங்கி விவரங்களை  பதிவேற்றம் செய்யாவிட்டாலும், மனுதாரர் ஆன்லைன் மனுவை பிரின்ட் எடுத்து கையெழுத்திட்டு, தேவையான ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்கலாம். மனுக்கள் மூலம் நிவாரணம் கோருவதற்கான நிபந்தனைகளும் வழங்கப்பட்டுள்ளன

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671209

----


(रिलीज़ आईडी: 1671240) आगंतुक पटल : 302
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Punjabi , Kannada