பாதுகாப்பு அமைச்சகம்

ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தின் ஐந்தாம் ஆண்டில், 20,60,220 பாதுகாப்பு படை ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு ரூ 42,740 கோடிக்கும் மேல் வழங்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 06 NOV 2020 3:45PM by PIB Chennai

முன்னாள் ராணுவ வீரர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஒரே பதவி ஒரே பென்ஷன் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை இந்திய அரசு 2015-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி எடுத்தது.

இதனால் இந்த ஐந்து ஆண்டுகளில் லட்சகணக்கான முன்னாள் ராணுவத்தினர் பலன் பெற்றுள்ளனர்.

ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தின் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், 20,60,220 பாதுகாப்பு படை ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு ரூ 42,740 கோடிக்கும் மேல் வழங்கப்பட்டுள்ளது.

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து நிலுவைத்தொகையாக ஓய்வு பெற்ற 20,60,220 ராணுவ ஓய்வூதியதாரர்கள் /ஓய்வூதியதாரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.19,795 கோடி வழங்கப்பட்டுள்ளது.

ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்களின் பதவிகளுக்கு ஏற்றவாறு ஒரே மாதிரியான பென்ஷன்  செயல்படுத்தப்பட்டுள்ளது. 2014 ஜூலை 1 முதல் ஆறு ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஆகும் செலவு சராசரியாக ரூ.42,740 கோடி என திட்டமிடப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670633

**********************


(रिलीज़ आईडी: 1670739) आगंतुक पटल : 389
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu