பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
திரவ இயற்கை வாயுவை எரிவாயுவாகப் பயன்படுத்துவதன் பலன்கள் குறித்த பிரச்சாரத்தை தொடங்குமாறு திரு தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல்
प्रविष्टि तिथि:
06 NOV 2020 2:24PM by PIB Chennai
திரவ இயற்கை வாயுவின் பலன்கள் குறித்து மக்கள் மற்றும் பயனாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பரப்புரையை முன்னெடுக்குமாறு இத்துறையின் பங்குதாரர்களுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அழைப்பு விடுத்தார்.
"திரவ இயற்கை வாயுவைப் போக்குவரத்து எரிபொருளாக பயன்படுத்துவது" குறித்த இணையக் கருத்தரங்கு ஒன்றில் இன்று பேசிய அவர், திரவ இயற்கை வாயு எதிர்காலத்துக்கான எரிபொருள் என்றும், மற்ற எரிபொருள்களுடன் ஒப்பிடும் போது அதன் விலை மற்றும் இதர சிறப்பம்சங்களைப் பற்றி துடிப்பான முறையில் எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த செய்தி சரியான முறையில் நுகர்வோர்களை எட்டினால், திரவ இயற்கை வாயுவின் குறைவான விலை அதிக அளவிலான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
திரவ இயற்கை வாயு அபரிதமான அளவில் கிடைப்பதாகவும், அதன் வளர்ச்சிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும் திரு பிரதான் கூறினார். திரவ இயற்கை வாயுவை முன்னுரிமை எரிவாயுவாக எவ்வளவு விரைவில் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
திரவ இயற்கை எரிவாயுவின் சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் வசதி ஆகிய நன்மைகளை எடுத்துரைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நாட்டை எரிவாயு சார்ந்த பொருளாதாரமாக மாற்றுவதை லட்சியமாகக் கொண்டுள்ள அரசு இதற்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை செய்து வருவதாக அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670605
**********************
(रिलीज़ आईडी: 1670723)
आगंतुक पटल : 307