ஜல்சக்தி அமைச்சகம்
"திறன்மிகு தண்ணீர் விநியோக அளவீடு மற்றும் கண்காணிப்பு அமைப்பின்" உருவாக்கத்துக்கான மாபெரும் சவால் - விண்ணப்பங்களின் மதிப்பீடு நடைபெறுகிறது
Posted On:
05 NOV 2020 2:41PM by PIB Chennai
போதுமான அளவு மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தரத்திலான தண்ணீரை நீண்ட கால அடிப்படையில் விநியோகிப்பதற்கான 'சேவை வழங்குதல்' மீது குறிப்பான கவனம் செலுத்தி, 2024-ஆம் வருடத்துக்குள் ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் குழாய் இணைப்பை வழங்க ஜல் ஜீவன் இயக்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த லட்சியத்தை அடைவதற்காக, திட்டத்தை கண்காணிப்பதற்கும், சேவைகளின் தரத்தை உறுதி செய்வதற்காக சேவை விநியோக தரவுகளை தானியங்கி முறையில் பதிவு செய்வதற்கும், நவீன தொழில்நுட்பம் தேவைப்படுகிறது.
தற்போதைய தேவையான நீர் மேலாண்மையில் தொழில்நுட்பத்தின் சக்தியைப் பயன்படுத்தும் பொருட்டு, 'திறன்மிகு தண்ணீர் விநியோக அளவீடு மற்றும் கண்காணிப்பு அமைப்பின்" உருவாக்கத்துக்கான மாபெரும் தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப சவால் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜல் ஜீவன் இயக்கம், குடி தண்ணீர் மற்றும் சுகாதாரத் துறை ஆகியவற்றுடன் இணைந்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த சவாலை அறிவித்துள்ளது.
இந்த மாபெரும் சவாலின் பயன்படுத்தும் முகவராக ஜல் ஜீவன் இயக்கமும், செயல்படுத்தும் முகமையாக சி-டாக் பெங்களூருவும் இருக்கும். அதோடு, இந்த சவாலுக்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவையும், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான கருத்துரு ஆதாரத்தையும், வழிகாட்டுதலையும், தொழில்நுட்ப ஆதரவையும் சி-டாக், பெங்களூரு வழங்கும்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து உற்சாகத்துடன் பலர் இதில் பங்கேற்றனர். பல்வேறு துறைகளில் இருந்து மொத்தம் 218 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவை தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பைப் பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670332
-----
(Release ID: 1670365)
Visitor Counter : 172