மத்திய அமைச்சரவை

தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா, இங்கிலாந்துக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 04 NOV 2020 3:35PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவின் தொலைத்தொடர்பு அமைச்சகம் மற்றும் இங்கிலாந்து அரசின் டிஜிட்டல், கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறைகள் ஆகியவற்றுக்கு இடையே தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பையும் பரஸ்பர புரிதலையும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேலும் வலுப்படுத்தும். ஐரோப்பிய யூனியன் பிரதேசத்தில் இருந்து இங்கிலாந்து வெளியில் வந்தபிறகு, கூட்டுறவில் மேம்படுத்தப்பட்ட வாய்ப்புகளை இந்தியாவிற்கு வழங்குவதும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். கீழ்க்காணும் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உள்ளன:

) தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப கொள்கை மற்றும் ஒழுங்குமுறை

) ஸ்பெக்ட்ரம் மேலாண்மை

) செல்பேசி ரோமிங் உள்ளிட்ட தொலைத்தொடர்பு இணைப்பு

) தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பங்களின் தொழில்நுட்ப தரப்படுத்தல் மற்றும் சோதனை மற்றும் சான்றிதழ்

) கம்பியில்லா தகவல் தொழில்நுட்பம்

) ஐந்தாவது தலைமுறை, இணைய உலகம்/ இயந்திரத்திலிருந்து இயந்திரம் வரை, கிளவுட் கம்ப்யூட்டிங், பிக் டேட்டா உள்ளிட்ட தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள தொழில்நுட்ப மேம்பாடுகள்

) தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பில் பாதுகாப்பு, தொலைத்தொடர்பு சேவைகளை பயன்படுத்துதல் மற்றும் அதன் பாதுகாப்பு அம்சங்கள்

) தொழில்நுட்ப வசதி மிகுந்த பகுதிகளில் திறன் கட்டமைப்பு மற்றும் நிபுணத்துவ பரிமாற்றம்

) வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த தகவல்கள் பரிமாற்றம்

) தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் கையொப்பமிட்ட நாடுகளுடன் கூட்டாக செயல்படுவது தொடர்பான வாய்ப்புகளை ஆராய்தல்

) தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் வல்லுநர்களின் வருகை, கண்காட்சிகள், நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை வாயிலாக வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்பத் திறனை

மேம்படுத்துதல்

) இரு நாடுகளின் ஒத்துழைப்போடு தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த இதர துறைகள்

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670014

------(Release ID: 1670115) Visitor Counter : 277