நிலக்கரி அமைச்சகம்

வர்த்தக நிலக்கரி சுரங்கங்களின் இரண்டாம் நாள் ஏலம் உற்சாகத்துடன் தொடர்ந்தது

Posted On: 03 NOV 2020 5:53PM by PIB Chennai

* வர்த்தக நிலக்கரி சுரங்கங்களின் இரண்டாம் நாள் ஏலத்தில் நான்கு நிலக்கரி சுரங்கங்கள் (மத்தியப் பிரதேசத்தில் 3 மற்றும் ஜார்கண்டில் 1) ஏலத்தில் விடப்பட்டன.

* ஏலத்தில் விடப்பட்ட மொத்த புவியியல் இருப்புகளின் அளவு - 1085 மெட்ரிக் டன்கள் ஆகும்.

* அனைத்து சுரங்கங்களுக்கும் விண்ணப்பதாரர்களிடையே கடும் போட்டி நிலவியது, ஒதுக்கீட்டு விலையை விட அதிகத் தொகைக்கு ஏலம் கேட்கப்பட்டது.

இரண்டு கட்டங்களாக நடைபெறும் வர்த்தக நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலத்தை மத்திய நிலக்கரி அமைச்சகம் 2020 ஜூன் 18 அன்று தொடங்கியது.

சமர்ப்பிக்கப்பட்ட தொழில்நுட்ப விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அறிவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, வர்த்தக நிலக்கரி சுரங்கங்களுக்கான மின் ஏலம் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669798

                                                          ------


(Release ID: 1669916) Visitor Counter : 140