வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

13-வது இந்திய நகர்புற போக்குவரத்து கருத்தரங்கு 2020; 9-ம் தேதி நடக்கிறது

Posted On: 03 NOV 2020 1:55PM by PIB Chennai

13-வது இந்திய நகர்புற போக்குவரத்து  கருத்தரங்கு 2020- ஐ வரும் 9-ம் தேதி மத்திய வீட்டு வசதி மற்றும் நகர விவகாரத்துறை அமைச்சர் திரு.ஹர்தீப்  எஸ்.பூரி தொடங்கி வைக்கிறார்.

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற  விவகாரத்துறை சார்பில் இந்த இணையவழி கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்த ஆண்டு, “நகர்புற போக்குவரத்தில்  வளர்ந்து வரும் போக்குகள்” என்ற தலைப்பில்  நாள் முழுவதும் இந்த கருத்தரங்கு நடைபெற உள்ளது.

கொவிட் 19 தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில் மக்களுக்கு அணுகக் கூடிய மற்றும் வசதியான போக்குவரத்தை வழங்குவதற்கு சர்வதேச, தேச அளவில் எடுக்கப்படும் புதுமையான நடவடிக்கைகள் குறித்து கருத்தரங்கில் கவனத்தில் கொள்ளப்படும். கருந்தரங்கை தொடங்கி வைத்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர விவகாரத்துறை அமைச்சர் திரு.ஹர்தீப் சிங் பூரி உரையாற்றுகிறார். ஜெர்மன் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த அரசின் பிரதிநிதிகளும் இந்த கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.

கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை மாநிலங்கள், நகர அமைப்புகள் பங்கேற்புடன்  12 முறை இது போன்ற கருத்தரங்குகள் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669736

***********************(Release ID: 1669763) Visitor Counter : 201