நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
ரூ.174.6 கோடி செலவில் 15 மாநிலங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி ரேஷன் கடை மூலம் விநியோகிக்கப்படும்
Posted On:
03 NOV 2020 11:28AM by PIB Chennai
நாட்டில் ஊட்டச்சத்து பாதுகாப்பை உருவாக்கும் நடவடிக்கையாக, ரேஷன் கடைகள் வாயிலாக செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் மத்திய அரசின் பரிசோதனை திட்டத்தை, உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயல்படுத்துகிறது. 2019-20ம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்கு இந்த பரிசோதனைத் திட்டத்தை ரூ.174.6 கோடி செலவில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தலா ஒரு மாவட்டத்தில் அமல்படுத்த 15 மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆந்திர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலா ஒரு மாவட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கும் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கடந்த 31.10.2020-ல் நடத்திய ஆய்வு கூட்டத்தில், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் தலைமையில் 2.11.2020 அன்று நடந்த கூட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாடு சேவைகள் மற்றும் மதிய உணவு திட்டத்தின் கீழ் 2021-2022ம் ஆண்டிலிருந்து செறிவூட்டப்பட்ட அரிசியை நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகிக்கும் வகையில் விரிவான திட்டம் தயாரிக்க வேண்டும் என இந்திய உணவு கழகத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. நாடு முழுவதும் 112 மாவட்டங்களில், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பதில் கவனம் செலுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669677
*******************
(Release ID: 1669720)
Visitor Counter : 339
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu