குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

கார்கில்-லேயில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி மக்களின் முகங்களில் புன்னகையை வரவழைக்கும் காதி

Posted On: 02 NOV 2020 3:51PM by PIB Chennai

கார்கில் மற்றும் லேயில் இமயமைலையை ஒட்டியுள்ள அமைதியான, அழகானப் பகுதிகள் தற்போது காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் உருவாக்கியுள்ள சுய-சார்பு வேலைவாய்ப்புகளின் காரணமாக தயாரிப்புகள் அதிகரித்துள்ளதால் மகிழ்ச்சியில் பூத்து குலுங்குகின்றன.

2017-18-ஆம் வருடத்தில் இருந்து, சுமார் 1,000 பல்வேறு சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி வசதிகளை அதன் முதன்மையான பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ்  காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் அமைத்துள்ளது.

இதன் மூலம், வெறும் மூன்றரை வருடங்களிலேயே 8,200-க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உள்ளூர் இளைஞர்களுக்கு உருவாக்கப்பட்டு, 2017-18 முதல் ரூ 32.35 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

சிமெண்ட் கற்கள் தயாரிப்பு, இரும்புப் பொருட்கள் உற்பத்தி, வாகனப் பழுது நீக்கு மையங்கள், தையல் மையங்கள், மரச்சாமான்கள் உற்பத்தி வசதிகள், மரச் சிற்பம் செய்யும் மையங்கள், இணைய மையம், அழகு சாதன மையம், மற்றும் தங்க நகைகள் உற்பத்தி வசதிகள் இதில் அடங்கும்.

கொவிட்-19 பொதுமுடக்கம் அமலில் இருந்த 2020-21-இன் முதல் ஆறு மாதங்களில் கூட, கார்கிலில் 26 புதிய தொழில்களும், லேயில் 24 புதிய திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளூர்வாசிகளிக்கு காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் உதவி அளித்தது.

பல்வேறுத் துறைகளில் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டங்களின் மூலம் இந்த இரண்டுப் பகுதிகளில் 350 வேலைவாய்ப்புகள் உருவானது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669462

******

(Release ID: 1669462)


(Release ID: 1669482)