நிதி அமைச்சகம்
அக்டோபர் 2020-ல் ரூபாய் 1,05,155 கோடி சரக்கு மற்றும் சேவை வரியாக வசூல்
Posted On:
01 NOV 2020 11:09AM by PIB Chennai
2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரியாக ரூபாய் 1,05,155 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூபாய் 19,193 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூபாய் 25,411 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ரூபாய் 52,540 கோடியும் (சரக்குகளின் இறக்குமதியின் மூலம் பெறப்பட்ட ரூபாய் 23,375 கோடி உட்பட), செஸ் வரி ரூபாய் 8,011 கோடியும் (சரக்குகளின் இறக்குமதியின் மூலம் பெறப்பட்ட ரூபாய் 932 கோடி உட்பட) அடங்கும்.
ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து வழக்கமான பைசல் தொகையாக மத்திய சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூபாய் 25,091 கோடியையும் மாநில சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூபாய் 19,427 கோடியையும் அரசு வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தின் வருவாய் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669239
*******
(Release ID: 1669239)
(Release ID: 1669312)
Visitor Counter : 303
Read this release in:
Odia
,
Kannada
,
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Telugu