குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மிலாது நபியை முன்னிட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

Posted On: 29 OCT 2020 2:21PM by PIB Chennai

மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்மிலாது நபி பண்டிகையை கொண்டாடும் போது கொவிட்-19 சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது வாழ்த்து செய்தி வருமாறு:

"நபிகள் நாயகத்தின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படும் மிலாது நபி நன்னாளை முன்னிட்டு நமது நாட்டின் மக்களுக்கு எனது மனப்பூர்வ வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரக்கம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் என்னும் சரியான பாதையை மனிதகுலத்துக்கு நபிகள் நாயகம் காட்டியுள்ளார். குடும்பத்தினரும், நண்பர்களும் ஒன்று கூடி வழிபடும் வாய்ப்பை மிலாது நபி அளிக்கிறது. ஆனால், இந்த வருடம், கொவிட்--19 பெருந்தொற்றின் காரணமாகசுகாதார விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி, எளிய முறையில் மிலாது நபியைக் கொண்டாடுமாறு மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

அமைதியான மற்றும் ஒற்றுமையான சமுதாயத்தை கட்டமைப்பதில் நபிகள் நாயகத்தின் என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய அறிவுரை நம்மை வழி நடத்தட்டும்."

----- 



(Release ID: 1668941) Visitor Counter : 166