அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

மலேரியா ஒட்டுண்ணியின் வாழ்க்கை சுழற்சி குறித்த ஆராய்ச்சிக்காக சிஎஸ்ஐஆர்-சிடிஆர்ஐ விஞ்ஞானி டாக்டர் சதீஷ் மிஸ்ராவுக்கு தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் டாக்டர் துளசிதாஸ் சுக் 2020 விருது

Posted On: 28 OCT 2020 5:08PM by PIB Chennai

லக்னோ அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்- மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் (சிஎஸ்ஐஆர்-சிடிஆர்ஐ) மூலக்கூறு ஒட்டுண்ணியியல் மற்றும் நோயெதிர்ப்பியல் பிரிவு தலைமை விஞ்ஞானி டாக்டர் சதீஷ் மிஸ்ரா  மலேரியா ஒட்டுண்ணிகளின்  வாழ்க்கைச் சுழற்சி குறித்த ஆராய்ச்சிக்காக தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் டாக்டர் துளசிதாஸ் சுக் 2020 விருதுக்கு  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பட்டயம், நினைவுப் பதக்கம் மற்றும்  ஊக்கத்தொகை பணம் அடங்கிய இந்த விருது, தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் வருடாந்திர மாநாட்டில் டாக்டர் சதீஷ் மிஸ்ராவுக்கு  வழங்கப்படும்.

அவர் கடந்த 2018, 2019 ஆம் ஆண்டுகளில் தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018ல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் சகுந்தலா அமீர் சந்த் விருது, 2013ல் மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையின் ராமலிங்கசுவாமி மறு நுழைவு ஃபெலோஷிப் முதலியவற்றைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668145

**********************



(Release ID: 1668246) Visitor Counter : 202