பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

வாழும் கலை அமைப்புடன் இணைந்து பழங்குடியினர் நலத்துறைக்கான இரண்டு சிறப்பு மையங்கள் திரு அர்ஜுன் முண்டாவால் துவக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2020 4:49PM by PIB Chennai

வாழும் கலை அமைப்புடன் இணைந்து பழங்குடியினர் நலத்துறைக்கான இரண்டு சிறப்பு மையங்களை மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். வாழும் கலை அமைப்பின் குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் திருமதி ரேணுகா சிங் ஸருதா, செயலாளர் திரு தீபக் கண்டேகர் மற்றும் துணைச் செயலாளர் திரு நவல்ஜீத் கபூர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு அர்ஜுன் முண்டாமகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாநிலத்தில் உள்ள பழங்குடி விவசாயிகளுக்கு நிலையான இயற்கை விவசாய வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கவும், ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் உள்ள 150 கிராமங்கள் மற்றும் 30 கிராமப் பஞ்சாயத்துகளில் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை வலுப்படுத்தவும் வாழும் கலை அமைப்பு, மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்துடன் இணைந்து இருப்பதை பாராட்டினார். நாட்டில் உள்ள பழங்குடி மக்களின் நல்வாழ்விற்காக மத்திய அரசு உறுதி பூண்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். வாழும் கலை அமைப்பின் தன்னார்வலர்களின் பங்களிப்பினால் பழங்குடியினருக்கான இந்த முயற்சி வெற்றி பெறும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் பிரதமரின் கனவான தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் முயற்சியாகவும் இது அமையும் என்றார் அவர். பழங்குடி பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு அரசியலமைப்பு உரிமைகள் குறித்து  கற்றுத் தரப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். அதிகாரம் அளித்தலின் வாயிலாக அவர்களால் பழங்குடியினர் சம்பந்தமான விஷயங்களில் முடிவெடுக்கவும், தங்கள் இனத்தை மேம்படுத்தவும் முடியும் என்று அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா கூறினார்.

முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து ராஜ் நிறுவன பிரதிநிதிகளிடம் பழங்குடியினர் சட்டம் மற்றும் விதிகள் மற்றும் அவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை  எளிதாகப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இரண்டாவதாக மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாநிலத்தில் உள்ள 10,000 பழங்குடி விவசாயிகளுக்கு நிலையான இயற்கை விவசாய வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். பழங்குடி விவசாயிகளை தற்சார்பு அடையச் செய்யும் வகையில் இந்த முயற்சி செயல்படுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667855

**********************


(வெளியீட்டு அடையாள எண்: 1667924) வருகையாளர் எண்ணிக்கை : 348
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Manipuri , Punjabi , Kannada