நித்தி ஆயோக்

இந்திய-ஆஸ்திரேலிய சுழற்சி பொருளாதார ஹேக்கத்தானை ஆஸ்திரேலிய காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து அடல் இன்னோவேஷன் மிஷன் நடத்துகிறது

Posted On: 26 OCT 2020 5:19PM by PIB Chennai

2020 டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், இந்திய-ஆஸ்திரேலிய சுழற்சி பொருளாதார ஹேக்கத்தானை ஆஸ்திரேலிய காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து அடல் இன்னோவேஷன் மிஷன் நடத்துகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் சுழற்சி பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவதற்கான புதுமையான வழிகளைப் பற்றி சிந்திக்கும் போது,

இரு நாடுகளின் பிரதமர்கள் கலந்துகொண்ட மெய்நிகர் மாநாடு ஒன்றில் ஜூன் 4-ஆம் தேதி அன்று இந்த நிகழ்ச்சியைப் பற்றிய எண்ணம் உருவானது.

சிறந்து விளங்கும் மாணவர்கள், புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) மற்றும் இரு நாடுகளின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களால், புதுமையான தொழில்நுட்பத் தீர்வுகளை கண்டறிதல் மற்றும் மேம்படுத்துதல் குறித்து இந்த நிகழ்ச்சியின் போது கவனம் செலுத்தப்படும்.

பேக்கேஜ் கழிவுகளை குறைத்தல் குறித்தான புதுமைகள், உணவு விநியோக சங்கிலிகளில் கழிவுகளை குறைப்பதற்கான புதுமைகள், நெகிழி கழிவை குறைத்தலுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல், மற்றும் முக்கிய எரிசக்தி உலோகங்கள் மற்றும் மின் கழிவுகளை புத்தாக்கம் செய்தல் ஆகிய நான்கு முக்கிய விஷயங்கள் மீது கவனம் செலுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667604

**********************


(Release ID: 1667624) Visitor Counter : 275