பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

100 புதிய பசுமை இயற்கை பொருட்களை காடுகளில் இருந்து டிரைப்ஸ் இந்தியா கொண்டு வருகிறது

प्रविष्टि तिथि: 26 OCT 2020 3:12PM by PIB Chennai

மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் வளர்ச்சி கூட்டமைப்பு (டிரைஃபெட்), தனது டிரைப்ஸ் இந்தியா வரிசையின் கீழ் 100 புதிய பொருட்களை சேர்த்துள்ளது.

பசுமை இயற்கை பொருட்களான இவற்றை காடுகளில் இருந்து டிரைப்ஸ் இந்தியா கொண்டு வருகிறது. ஃபாரெஸ்ட் ஃப்ரெஷ்  நேச்சுரல்ஸ் அண்ட் ஆர்கானிக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய வகை பழங்குடிப் பொருட்களை, டிரை ஃபெட் நிர்வாக இயக்குநர் திரு. பிரவிர் கிருஷ்ணா அறிமுகப்படுத்தினார்.

ஒவ்வொரு வாரமும் 100 புதிய பொருட்களை டிரைப்ஸ் இந்தியாவில் இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதில் முதல் 100 பொருட்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இவை 125 டிரைப்ஸ் இந்தியா மையங்களிலும், டிரைப்ஸ் இந்தியா நடமாடும் கடைகளிலும், டிரைப்ஸ் இந்தியாவின் மின் வணிக தளமான tribesindia.com-லும், இதர மின் வணிக தளங்களிலும் கிடைக்கும்.

நாடு முழுவதும் உள்ள  பல்வேறு நகரங்களில் 'நடமாடும் இந்திய பழங்குடிகள்' வாகனங்களை காணொலி காட்சி மூலம் மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா சமீபத்தில் தொடங்கி வைத்தார்.

 

முதல் கட்டமாக, அகமதாபாத், அலஹாபாத், பெங்களூரு, போபால், சென்னை, கோயமுத்தூர், தில்லி, கவுகாத்தி, ஹைதரபாத், ஜகதல்புர், குந்தி, மும்பை மற்றும் ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் 57 வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667573

*****

(Release ID: 1667573)


(रिलीज़ आईडी: 1667590) आगंतुक पटल : 260
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Telugu