உள்துறை அமைச்சகம்

இந்திய-திபெத் எல்லைக் காவல்படையை நவீனமயமாக்கவும், இன்னும் செயல்திறன் மிக்கதாக ஆக்கவும் அரசு உறுதி பூண்டுள்ளது: உள்துறை இணை அமைச்சர்

Posted On: 24 OCT 2020 3:48PM by PIB Chennai

இந்திய-திபெத் எல்லைக் காவல்படையின் 59-வது அமைப்பு தினத்தை ஒட்டி கிரேட்டர் நொய்டாவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி கலந்து கொண்டார்.

வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர், இந்திய-திபெத் எல்லைக் காவல்படையை நவீனமயமாக்கவும், இன்னும் செயல்திறன் மிக்கதாக ஆக்கவும் அரசு உறுதி பூண்டுள்ளது என்றார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்திய-திபெத் எல்லைக் காவல்படைக்கு முழு அதிகாரம் அளிக்க அரசு உறுதியாக உள்ளது என்று நிகழ்ச்சியில் பேசிய உள்துறை இணை அமைச்சர் மேலும் கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் செயல்மிகு தலைமையின் கீழ், இந்திய-திபெத் எல்லைக் காவல் படையை நவீனமக்கி அதன் செயல் திறனை அதிகப்படுத்த பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்

"வசுதேவ குடும்பகம் என்று கூறும் நமது கலாச்சாரம் அமைதியை வலியுறுத்துகிறது. அதே நேரம், எதிரிகளின் சூழ்ச்சிகளை எதிர்கொள்வதற்கான வலிமையும் அதே கலாச்சாரம் தான் நமக்கு அளிக்கிறது," என்று திரு ஜி கிஷன் ரெட்டி கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667290

-----


(Release ID: 1667310)