கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் மென்பொருள் தொடக்கம்

Posted On: 20 OCT 2020 1:54PM by PIB Chennai

கப்பல் போக்குவரத்து சேவைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு முறைகளை மேற்கொள்வதற்கான உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மென்பொருளை மத்திய கப்பல் துறை (தனிப்பொறுப்பு) அமைச்சர் திரு.மன்சுக் மாண்டவியா இன்று தில்லியில் தொடங்கி வைத்தார்.

மென்பொருள் தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் திரு.மன்சுக் மாண்டவியா கூறியதாவது;

இந்திய துறைமுகங்களில் போக்குவரத்து மேலாண்மை மேற்கொள்வதற்காக அதிக செலவில் வெளிநாட்டு மென்பொருள் உபயோகிப்பதற்கு பதில் நாட்டின் தேவைக்கு ஏற்ப, உள்நாட்டிலேயே இது முன்னெடுக்கப்பட்டது. பிரதமர் திரு.நரேந்திரமோடியின் ஆத்ம நிர்பார் பாரத் கண்ணோட்டத்தின்படி கப்பல் போக்குவரத்து சேவைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு முறைகள் என்ற மென்பொருட்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து நிர்வாக முறைக்கு வழிவகுக்கும் வகையில் உலகத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு முறைகள் மென்பொருளானது. துறைமுகத்துக்குள் அல்லது நீர் வழிக்குள் போக்குவரத்தை விரிவாக நிர்வகித்தல் கப்பல் நிலை, இதர போக்குவரத்தின் நிலை அல்லது வானிலை ஆபத்து எச்சரிக்கைகளை தீர்மானிக்கிறது. கப்பல் போக்குவரத்து சேவைகள் மென்பொருள் கடலில் பாதுகாப்பான வாழ்க்கைக்கு பங்களிப்பு செய்கிறது. பாதுகாப்பான, திறன் வாய்ந்த கப்பல் போக்குவரத்து, கடல் சூழல் மற்றும் அருகில் உள்ள கடலோரப் பகுதிகள், பணியிடங்கள் மற்றும்  கடல் போக்குவரத்தின் சாத்தியமான பாதகமான விளைவுகளில் இருந்து கடலோரப் பகுதிகளில் நிறுவப்பபட்டவைகளைப்  பாதுகாத்தல் ஆகியவற்றுக்கும் பங்களிப்பு செய்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666070

-----



(Release ID: 1666126) Visitor Counter : 385