பாதுகாப்பு அமைச்சகம்
கிழக்கு லடாக் பகுதியின் டெம்சோக் பகுதியில், சீன ராணுவ வீரரை பிடித்தது இந்திய ராணுவம்
Posted On:
19 OCT 2020 3:23PM by PIB Chennai
எல்லை கட்டுப்பாட்டு பகுதியை கடந்து, கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதியில் இன்று நுழைந்த சீன ராணுவ வீரர் வாங் யா லாங் என்பவரை இந்திய ராணுவம் பிடித்தது.
மோசமான பருவ நிலையில் சிக்கி அவதிப்பட்ட அந்த சீன ராணுவ வீரருக்கு, இந்திய ராணுவத்தினர் மருத்துவ உதவி, ஆக்ஸிஜன் அளித்தனர். பின்னர் அவருக்கு உணவும், கடும் குளிரிலிருந்து காக்கும் உடையையும் இந்திய ராணுவத்தினர் வழங்கினர்.
இந்நிலையில், சீன ராணுவ வீரர் ஒருவரை காணவில்லை எனவும், அவரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டால், தெரியப்படுத்தும்படியும் சீன ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஏற்கனவே உள்ள ராணுவ நெறிமுறைகள் படி, அனைத்து நடைமுறைகளும் முடிந்தபின், அந்த சீன ராணுவ வீரர், சுசூல் - மோல்டோ சந்திப்பு பகுதியில் இந்திய ராணுவத்தினரால் ஒப்படைக்கப்படவுள்ளார்.
-----
(Release ID: 1665837)
Visitor Counter : 226
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Malayalam