கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

இந்தியா-ஈரான் சபாஹர் துறைமுகம் இடையிலான சரக்கு போக்குவரத்துக்கான 40% தள்ளுபடி மேலும் ஒரு ஆண்டுக்கு நீடிக்கப்படுகிறது.

Posted On: 16 OCT 2020 3:32PM by PIB Chennai

ஈரானின் சபாஹரில் உள்ள ஷாஹித் பெஹெஷ்டி துறைமுகம்-இந்தியாவில் உள்ள தீனதயாள் துறைமுகம் மற்றும் ஜவஹர்லால் துறைமுகங்களுக்கு இடையே சரக்கு போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கட்டணத்தில் 40 % தள்ளுபடி அளிக்கும் மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சகத்தின் சலுகை  மேலும் ஒரு ஆண்டுக்கு நீடிக்கப்படுகிறது.

இருபது அடிக்கு சமமான 50 அலகுகள் அல்லது 500 மெட்ரிக் டன் அளவுக்கு  ஷாஹித் பெஹெஷ்டி துறைமுகத்துக்கு சரக்கு ஏற்றிச் செல்லும் கப்பல்கள் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, கப்பல் தொடர்பான கட்டணங்களின் வரி சலுகை, (விஆர்சி) விகிதாசாரத்தில் பயன்படுத்தப்பட வேண்டும். 

சபாஹர் துறைமுகத்தில் ஷாஹித் பெஹெஷ்டி முனையத்தில் ஏற்றப்படும் அல்லது இறக்கப்படும் சரக்குகளுக்கு தள்ளுபடி சலுகை உண்மையில் அளிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய, துறைமுகங்கள் இந்திய துறைமுகங்கள் குளோபல் லிமிடெட் உடன் இணைந்து நிலையான இயக்க செயல்பாட்டு முறைகளைக் கொண்டு மதிப்பிடுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665113

**********************(Release ID: 1665145) Visitor Counter : 136