கலாசாரத்துறை அமைச்சகம்

கலா சன்ஸ்கிருதி விகாஸ் யோஜனா' என்னும் மத்திய துறை திட்டத்தின் பல்வேறு கூறுகளின் கீழ் நடத்தப்படும் மெய்நிகர்/ஆன்லைன் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டுதல்களை கலாச்சார அமைச்சகம் வெளியிட்டது

Posted On: 16 OCT 2020 11:25AM by PIB Chennai

கண்காட்சிகள், நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கலை மற்றும் கலாச்சாரத் துறையின் செயல்பாடுகளின் மீது குறிப்பிடத்தகுந்த பாதிப்பை கொவிட் பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ளது.

இதை கருத்தில் கொண்டு, நிகழ்ச்சிகளை முறையாக ஆவணப்படுத்தி அவற்றை டிஜிட்டல் தளங்களில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை கலாச்சார அமைச்சகம் மற்றும் அதன் கலைஞர்கள் மற்றும் நிறுவனங்கள் எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, 'கலா சன்ஸ்கிருதி விகாஸ் யோஜனா' என்னும் மத்திய துறை திட்டத்தின் பல்வேறு கூறுகளின் கீழ் நடத்தப்படும் மெய்நிகர்/ஆன்லைன் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டுதல்களை கலாச்சார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

குறைந்த அளவிலான பார்வையாளர்களைக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்த சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட போதிலும், மெய்நிகர் முறையில் 'கலா சன்ஸ்கிருதி விகாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட நிகழ்ச்சிகளுக்காகவும், கலைஞர்களுக்கு உதவுவதற்காகவும் இந்த வழிகாட்டுதல்களை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665035



(Release ID: 1665079) Visitor Counter : 255