பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

நகர்னர் எஃகு ஆலையை, என்எம்டிசி நிறுவனத்திடம் இருந்து தனியாக பிரித்து, பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 14 OCT 2020 4:42PM by PIB Chennai

தேசிய கனிம மேம்பாட்டு நிறுவனத்திடம்  (என்எம்டிசி) இருந்து, நகர்னர் எஃகு ஆலையை (NSP) பிரிக்கவும், அதில் உள்ள மத்திய அரசின் பங்குகளை முழுமையாக விற்கவும், பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது.

ஆண்டுக்கு 3 மில்லியன் டன்  எஃகு உற்பத்தி செய்யும் என்எஸ்பி ஆலையை சட்டீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில், 1980 ஏக்கரில் என்எம்டிசி நிறுவனம் அமைத்தது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.23,140 கோடி. என்எஸ்பி திட்டத்தில்  இதுவரை ரூ.17,186 கோடியை, என்எம்டிசி முதலீடு செய்துள்ளது. இவற்றில் ரூ.16,662 கோடி எம்என்டிசியின் சொந்த நிதி. ரூ.524 கோடி பங்குச் சந்தை மூலம் திரட்டப்பட்டது.

என்எஸ்பி பங்குகளை, எம்எம்டிசியின் கிளை நிறுவனமாக விற்பனை செய்ய கடந்த 2016ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த முடிவில் திருத்தம் செய்து, என்எஸ்பி நிறுவனத்தை தனி நிறுவனமாக பிரித்து அதன் பங்குகளை விற்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இறு நிறுவனங்களின் நிதி செயல்பாடு மற்றும் நிர்வாகம் தனித்தனியாக இருக்கும்.

எம்எம்டிசி மத்திய அரசின்  எஃகு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத் துறை நிறுவனம். இதில் மத்திய அரசுக்கு 69.65 சதவீத பங்குகள் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664358

**********************


(रिलीज़ आईडी: 1664459) आगंतुक पटल : 207
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Marathi , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu