சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

உலகிலேயே 10 லட்சம் மக்கள் தொகையில் குறைவான பாதிப்புகள் மற்றும் இறப்புகளை இந்தியா தொடர்ந்து கண்டு வருகிறது

Posted On: 13 OCT 2020 12:32PM by PIB Chennai

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மத்திய அரசு செயல்படுத்தி வரும் கவனம் மிகுந்த யுக்திகள் மற்றும் சிறப்பான நடவடிக்கைகளின் காரணமாக, உலகிலேயே 10 லட்சம் மக்கள் தொகையில் குறைவான பாதிப்புகள் மற்றும் இறப்புகளை இந்தியா தொடர்ந்து கண்டு வருகிறது

பத்து லட்சம் மக்கள் தொகையில் பாதிப்படைவர்களின் எண்ணிக்கை சர்வதேச அளவில் 4,794 ஆக இருக்கும் நிலையில், இந்தியாவில் இது 5,199 ஆக உள்ளது. இங்கிலாந்து, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் அதிக பாதிப்புகளை கண்டு வருகின்றன.

அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் செய்வதை பொருத்தவரையில், முதன்மையான இடங்களில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,73,014 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், இது வரை செய்யப்பட்ட மொத்த பரிசோதனிகளின் எண்ணிக்கை 8.89 கோடியை கடந்துள்ளது.

 

புதிய பாதிப்புகள் இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில், 55,324 புதிய பாதிப்புகள் நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் 92,830 ஆக இருந்த வாராந்திர சராசரி, அக்டோபர் இரண்டாவது வாரத்தில் 70,114 ஆக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663941

*******

(Release ID: 1663941)



(Release ID: 1663967) Visitor Counter : 131