கலாசாரத்துறை அமைச்சகம்

திருமதி விஜய ராஜே சிந்தியாவின் நூற்றாண்டை முன்னிட்டு 100 ரூபாய் நாணயத்தை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நாளை வெளியீடு

Posted On: 11 OCT 2020 3:57PM by PIB Chennai

திருமதி விஜய ராஜே சிந்தியாவின் நினைவாக 100 ரூபாய் மதிப்பிலான நாணயத்தை   பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக  நாளை, அக்டோபர் 12, 2020, வெளியிடுகிறார். குவாலியரின் ராணி என்று அழைக்கப்படுபவர் திருமதி விஜய ராஜே சிந்தியா. அவரது  நூற்றாண்டு பிறந்ததினத்தை முன்னிட்டு இந்த நாணயம் நாளை வெளியிடப்படுகிறது. அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், பிரத்யேகமான  நாணயத்தை நிதி அமைச்சகம் தயார் செய்துள்ளது. பல்வேறு நாடுகளில் உள்ள திருமதி சிந்தியாவின் உறவினர்கள் மற்றும் பெருமக்கள் காணொலிக் காட்சி வாயிலாக இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

----


(Release ID: 1663573) Visitor Counter : 127