இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

விளையாட்டு அமைச்சகம் வெளியிட்ட நிலையான செயல்பாட்டு வழிமுறைகளின் படி ஒலிம்பிக் பயிற்சி மீண்டும் தொடங்கியுள்ளதை நீச்சல் போட்டியாளர்கள் வரவேற்றுள்ளனர்

Posted On: 10 OCT 2020 5:56PM by PIB Chennai

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வெளியிட்ட விளையாட்டுகளுக்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகளின் படி ஒலிம்பிக் பயிற்சி மீண்டும் தொடங்கியுள்ளதை நீச்சல் போட்டியாளர்கள் வரவேற்றுள்ளனர்.

நீச்சல் போட்டியாளர்கள் நீச்சல் குளங்களை பயன்படுத்திக் கொள்வதற்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டது.

செப்டம்பர் 30-ஆம் தேதியிட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவில், கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள நீச்சல் குளங்களை தவிர இதர நீச்சல் குளங்களை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

ஒலிம்பிக் தொகுதியில் B குறியீட்டை பெற்ற ஆறு நீச்சல் வீரர்களில் ஒருவரான விர்தாவால் காடே, மீண்டும் பயிற்சிகள் தொடங்கி உள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

"இது ஒரு மிகச்சிறந்த முடிவு. நீச்சல் வீரர்கள் தங்களது பழைய நிலைக்கு விரைவில் திரும்ப இது வழிவகுக்கும். மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவை மாநில அரசுகள் முழுவதுமாக ஆதரிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறியுள்ளார்.

துரோணாச்சாரியா விருது பெற்ற பயிற்சி அளிப்பவரான நிஹார் அமீனும் இந்த முடிவை வரவேற்றுள்ளார். இந்திய நீச்சல் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மோனல் சோக்சியும் இதை வரவேற்றுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663397

----



(Release ID: 1663423) Visitor Counter : 115