சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

17வது நாளாக, கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கு கீழ் உள்ளது

प्रविष्टि तिथि: 08 OCT 2020 11:20AM by PIB Chennai

நாட்டில் கொவிட் பரிசோதனை பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

நாள் ஒன்றுக்கு, ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 140 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்ற உலக சுகாதார நிறுவனத்தின்  அறிவுரையை நிறைவேற்றும் வகையில் இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் செயல்படுகிறது.

மற்றொரு சாதனையாக 35 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில்பரிந்துரைக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பரிசோதனைகள் செய்யப்படுகின்றனநாள் ஒன்றுக்கு, ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கான  பரிசோதனையின் தேசிய சராசரி 865 ஆக உள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 12 லட்சம்  (11,94,321 )பரிசோதனைகள் செய்யப்பட்டனஇதனால் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 8.34 கோடியாக அதிகரித்துள்ளது

ஒரே நாளில் 83,011 பேர் குணமடைந்த நிலையில், 78,524 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 58,27,704-ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களுக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்குமான இடைவெளி 49 லட்சத்தை (49,25,279) கடந்துவிட்டது.

 

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த 17 நாட்களாக 10 லட்சத்துக்கும் கீழ் உள்ளது. நாட்டில் தற்போது 9,02,425 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குணமடைந்தோர் வீதம் 85.25%-மாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 78,524 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது, 971 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662616

******

(Release ID: 1662616)


(रिलीज़ आईडी: 1662664) आगंतुक पटल : 230
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu , Malayalam , Assamese , Manipuri