தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

கொவிட்-19 சரியான நடத்தை முறைக்கான மக்கள் இயக்கத்தை மாண்புமிகு பிரதமர் துவக்கி வைக்க இருக்கிறார்

Posted On: 07 OCT 2020 7:26PM by PIB Chennai

கொவிட்-19 சரியான நடத்தை முறை குறித்த மக்கள் இயக்கத்துக்கான பிரச்சாரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (2020 அக்டோபர் 8) டிவிட்டர் பதிவொன்றின் மூலம் துவக்கி வைக்கிறார்.

எதிர்வரும் பண்டிகைகள், குளிர் காலம் மற்றும் பொருளாதார நடைமுறைகள் மீண்டும் தொடங்கி இருப்பதை கருத்தில் கொண்டு இந்த பிரச்சாரம் திட்டமிடப்பட்டுள்ளது.

மக்கள் பங்களிப்பை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் இந்த பிராச்சாரம் தொடங்குகிறது. 'முகக்கவசம் அணியுங்கள், தனிநபர் இடைவெளியை கடைபிடியுங்கள், கை தூய்மையை பேணுங்கள்' ஆகிய முக்கிய செய்திகளை வலியுறுத்தும் வகையில் இந்த குறைந்த செலவில் அதிக தாக்கத்தை உண்டாக்கக்கூடிய பிரச்சாரம் அமையும்.

அனைவராலும் கொவிட்-19 உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படும். மத்திய அரசின் அமைச்சங்கங்கள்/துறைகள் மற்றும் மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்களால் கீழ்கண்ட முக்கிய அம்சங்களோடு ஒரு செயல்திட்டம் செயல்படுத்தப்படும்.

 

* அதிக பாதிப்புகள் உள்ள மாவட்டங்களில் பகுதி சார்ந்த இலக்கு நிர்ணயித்த தொடர்பு

* ஒவ்வொரு குடிமகனையும் சென்றடையும் வகையில் எளிமையான, எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய தகவல்கள்

* அனைத்து ஊடக தளங்களையும் பயன்படுத்தி நாடு முழுவதும் பிரச்சாரம்

* முன்கள பணியாளர்களை ஈடுபடுத்தி மற்றும் அரசு திட்டங்களின் பயனாளிகளை சென்றடையும் விதத்தில் பொது இடங்களில் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள்

* அரசு வளாகங்களில் பதாகைகள்/சுவர் சித்திரங்கள்/மின்னணு பலகைகள்

* ஊள்ளூர் மற்றும் தேசிய அளவில் புகழ்பெற்றவர்களை ஈடுபடுத்தி பிரச்சாரம்

* தொடர் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக ஊர்திகளில் பிரச்சாரம்

* ஒலி தகவல்கள்: துண்டு பிரசுரங்கள்/விழிப்புணர்வு கையேடுகள்

* கொவிட் தகவல்களை பரப்புவதற்காக உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்களின் ஆதரவை கோருதல்

சிறப்பான சென்றடைதல் மற்றும் தாக்கத்தை உறுதி செய்வதற்காக அனைத்து தளங்களிலும் ஒருங்கிணைந்த ஊடக பிரச்சாரம்

--- 



(Release ID: 1662527) Visitor Counter : 230