மத்திய அமைச்சரவை

இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு அமைப்பு மற்றும் இன்டர்நேஷனல் பார்கோட் ஆஃப் லைஃப் ஆகியவற்றுக்கு இடையான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

Posted On: 07 OCT 2020 4:32PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு அமைப்பு மற்றும் இன்டர்நேஷனல் பார்கோட் ஆஃப் லைஃப் ஆகியவற்றுக்கு இடையான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் துணை அமைப்பான இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு அமைப்பு மற்றும் கனடா நாட்டை சேர்ந்த லாப நோக்கில்லாத அமைப்பான இன்டர்நேஷனல் பார்கோட் ஆப் லைப் ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தம் 2020 ஜூன் மாதத்தில் கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் உயிரினங்கள் சரியாக அடையாளப்படுத்தப்பட்டு, பட்டியலிடப்படும். இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு அமைப்பால் சர்வதேச திட்டங்களில் இதன் மூலம் பங்கு பெற முடியும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662330

---- 


(Release ID: 1662405) Visitor Counter : 237