பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நரேந்திர மோடி அரசு கடந்த ஆறு வருடங்களில் படிப்படியாக உயர்த்தியுள்ளது: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 06 OCT 2020 5:22PM by PIB Chennai

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை பிரதமர் திரு நரேந்திர மோடி நிறுத்தி விடுவார் என்ற எதிர்க்கட்சிகளின் கூற்றை மறுத்து பதிலளித்த மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த ஆறு வருடங்களில் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை படிப்படியாக உயர்த்தி உள்ளது என்று கூறினார்.

ஜம்மு காஷ்மீரில் கத்துவா மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் வாதத்திற்கு எந்த ஆதாரங்களும் புள்ளிவிவரங்களும் இல்லை என்றார்.

இது பற்றி மேலும் கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், கடந்த 2015-16 ஆம் ஆண்டுகளில் ஒரு குவின்டால் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூபாய் 1410 ஆக இருந்தது என்றும் 2020- 21ல் அது ரூபாய் 1868 ஆக உயர்ந்து இருக்கிறது என்றும் தெரிவித்தார். இதேபோல் ஒரு குவிண்டால் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 2015-16ல் ரூபாய்  1525 ஆக இருந்ததாகவும் தற்போது 2020-21ல் ரூபாய் 5275ஆக உயர்த்தப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662055

                                                                         ------ 


(Release ID: 1662109) Visitor Counter : 150