தேர்தல் ஆணையம்
சுதந்திரமான, நேர்மையான, மக்கள் பங்கு கொள்ளும், பாதுகாப்பான தேர்தலை பிகாரில் நடத்துவதற்கு முன்னுரிமை: தலைமை தேர்தல் ஆணையர்
Posted On:
05 OCT 2020 5:24PM by PIB Chennai
2020 செப்டம்பர் 25 அன்றும் அதைத் தொடர்ந்தும் அறிவிக்கப்பட்ட பிகார் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களின் இடைத் தேர்தல்களின் பார்வையாளர்களுக்கான விளக்கக் கூட்டம் ஒன்றை இந்திய தேர்தல் ஆணையம் இன்று நடத்தியது.
பார்வையாளர்களுடன் உரையாடிய தலைமை தேர்தல் ஆணையர் திரு சுனில் அரோரா, சர்வதேச அளவில் தேர்தல்களின் மீது கொவிட்-19 ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்தும், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்கு முடிவெடுப்பதற்கு முன் இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலித்த பல்வேறு விஷயங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
சுதந்திரமான, நேர்மையான, மக்கள் பங்கு கொள்ளும், பாதுகாப்பான தேர்தலை பிகாரில் நடத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
பெருந்தொற்றுக்கிடையே நடக்கும் முதல் மிகப்பெரிய தேர்தல் என்பதால் உலகம் இதை உற்று நோக்கும் என்றும், எனவே நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனநாயகத்தின் வலிமை அதன் முதன்மை பங்குதாரரான வாக்காளர்களிடம் தான் இருக்கிறது என்று கூறிய திரு அரோரா, வாக்களிக்கும் மையங்களுக்கு வந்து சுதந்திரமாக வாக்களிப்பதற்கான அனைத்து நம்பிக்கையையும் வாக்காளர்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661763
**********************
(Release ID: 1661836)
Visitor Counter : 144