வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்தின் 6வது ஆண்டை கொண்டாடுகிறது மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை - ‘6 ஆண்டுகள் தூய்மை, ஒப்பிடமுடியாதது’ என்ற தலைப்பில் இணைய கருத்தரங்கு நடத்தப்பட்டது.
Posted On:
02 OCT 2020 3:26PM by PIB Chennai
“நகர்ப்பற தூய்மை இந்தியா திட்டத்தின், 6வது ஆண்டை நாம் நிறைவு செய்யும் வேளையில், , தூய்மையான, ஆரோக்கியமான இந்தியாவுக்கான உறுதிமொழியை மீண்டும் உறுதிப்படுத்தும் நேரம் இது” என மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் திரு.ஹர்தீப் சிங் பூரி கூறினார்.
மகாத்மா காந்தியின் 151-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்தின் 6 ஆண்டு சாதனைகளை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை இன்று கொண்டாடியது.
நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்தின் 6-ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ‘6 ஆண்டுகள் தூய்மை, ஒப்பிடமுடியாதது’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இணைய கருத்தரங்கில் பேசிய அமைச்சர் திரு.ஹர்தீப் சிங் பூரி, ‘‘மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை நடத்திய தூய்மை கணக்கெடுப்பில், 12 கோடி பேர் பங்கேற்றதாகவும், இதில் மக்களின் கூட்டு சக்தி வெளிப்பட்டதாகவும் கூறினார். தூய்மை இந்தியா தொலைநோக்குடன், நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் பிரதமரால் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டதாகவும், அந்தக் கனவை மக்கள் நனவாக்கியதைப் பார்க்கும்போது பெருமிதமாக இருப்பதாகவும் அமைச்சர் திரு.ஹர்திப் சிங் பூரி தெரிவித்தார்.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் திரு.துர்கா ஷங்கர் மிஸ்ரா, இத்திட்டத்தின் சாதனைகளை இணைய கருத்தரங்கில் விரிவாக விளக்கினார். ‘‘திறந்தவெளி கழிப்பிடம் இல்லா நகர்ப்புற இந்தியாவை உருவாக்கும் நோக்கத்துடன், அனைத்து நகரங்களில் நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதாகவும், இன்று 97% நகரங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நகரங்களாக மாறியுள்ளன’’ என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில், ‘ ‘6 ஆண்டுகள் தூய்மை, ஒப்பிடமுடியாதது’ என்ற குறும்படமும் வெளியிடபட்டது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661001
****************
(Release ID: 1661046)
Visitor Counter : 209
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada