பாதுகாப்பு அமைச்சகம்

88-வது விமானப் படை தினக் கொண்டாட்டம்

प्रविष्टि तिथि: 02 OCT 2020 12:28PM by PIB Chennai

தனது 88-வது ஆண்டு விழாவை 2020 அக்டோபர் 8 அன்று இந்திய விமானப்படை கொண்டாடுகிறது. இதையொட்டி, பல்வேறு விமானங்கள் பங்குபெறும் வான் சாகச நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த நிகழ்ச்சி காசியாபாத்தில் உள்ள விமானப் படை தளத்தில் நடைபெறுவதையொட்டி, 2020 அக்டோபர் 1 அன்று ஒத்திகை நடத்தப்பட்டது.

விமானப்படை தினத்தின் கொண்டாட்டங்களின் போது விமானங்கள் தாழ்வாக பறக்கும் என்பதால், தில்லி, காசியாபாத் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் உணவுப் பொருட்களை வெளியில் வீச வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஏனென்றால், உணவுப் பொருட்களை வெளியில் வீசினால், அவற்றை உண்பதற்காக பறவைகள் வரும். இதன் மூலம் விமானங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். மேலும், இறந்த விலங்குகளின் உடல்கள் வெளியிடங்களில் தென்பட்டால் 9559898963 என்ற எண்ணை தொடர்பு கொள்ள மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660945

****************


(रिलीज़ आईडी: 1660986) आगंतुक पटल : 249
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Punjabi , English , हिन्दी , Telugu , Manipuri , Assamese , Urdu