ஜல்சக்தி அமைச்சகம்
கிராமப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் ஜல் ஜீவன் இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கான உங்களது முயற்சிகளை தொடருங்கள்: அனைத்து கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கும் பிரதமர் வேண்டுகோள்
Posted On:
01 OCT 2020 5:21PM by PIB Chennai
நாட்டிலுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்து தலைவர்களையும் 2020 செப்டம்பர் 29 தேதியிட்ட கடிதம் ஒன்றின் மூலம் தொடர்பு கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜல் ஜீவன் இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கான அவர்களது முயற்சிகளை தொடருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிராமப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்குவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். மக்கள் அளித்த பங்களிப்பு எவ்வாறு இந்தத் திட்டத்தை வெற்றியடைய செய்துள்ளது என்பதை குறித்து பிரதமர் தனது கடிதத்தில் விளக்கியுள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் தண்ணீர் விநியோக பிரச்சினை மட்டும் தீராது, காலரா, வயிற்றுப்போக்கு, டைபாய்ட் போன்ற நீரினால் பரவும் நோய்களும் கட்டுப்படுத்தப்படும் என்று கூறிய பிரதமர், தூய்மையான தண்ணீரை கால்நடைகளுக்கும் கொடுப்பதன் மூலம் அவற்றின் ஆரோக்கியம் மேம்பட்டு, உற்பத்தி திறன் அதிகமாகி, குடும்பங்களின் வருமானமும் உயரும் என்றார்.
ஜல் ஜீவன் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுமாறு கிராம பஞ்சாயத்துகளை பிரதமர் கேட்டுக்கொண்டார். நாடு கொரோனாவுடன் போராடும் காலகட்டத்தில் எழுதப்பட்டுள்ள இந்தக் கடிதம், தற்சார்பு இந்தியாவை நோக்கிய வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கைகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது.
தண்ணீர் பற்றக்குறை பெண்களையும், குழந்தைகளையும் எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி தனது கடித்தத்தில் பிரதமர் திரு மோடி குறிப்பிட்டுள்ளார். 'ஏழைகள் நல வேலைவாய்ப்புத் திட்டத்தின்' கீழ் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.
கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் இருந்து ஆலோசனைகளை வரவேறுள்ள பிரதமர், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்களது கிராமங்களை பாதுகாப்பாக வைத்திருக்க அனைத்து நடவடிக்கைகளும் அவர்கள் எடுப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். அனைவரும் நல்ல ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் பெற பிரதமர் வாழ்த்தினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660683
****************
(Release ID: 1660787)
Visitor Counter : 201