நிதி அமைச்சகம்

சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ 95,480 கோடி செப்டம்பர் 2020-இல் வசூலிக்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 01 OCT 2020 3:18PM by PIB Chennai

ரூ 95,480 கோடி மொத்த சரக்கு மற்றும் சேவை வரி 2020 செப்டம்பர் மாதத்தில் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூ 17,741 கோடி, மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூ 23,131 கோடி, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ரூ 47,484 கோடி மற்றும் செஸ் வரி ரூ 7,124 கோடி (சரக்குகளின் இறக்குமதி மீது வசூலிக்கப்பட்ட ரூ 788 கோடி உட்பட) ஆகும்.

ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து வழக்கமான பைசல் தொகையாக மத்திய சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூ 21,260 கோடியையும்மாநில சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூ 16,997 கோடியையும் அரசு வழங்கியுள்ளது.

வழக்கமான பைசலுக்கு பிறகு மத்திய மற்றும் மாநில அரசுகளால் 2020 செப்டம்பர் மாதத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருவாய் மத்திய சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூ 39,001 கோடியும்மாநில சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூ 40,128 கோடியும்  ஆகும்.

கடந்த வருடத்தின் இதே மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த வருட செப்டம்பர் மாதத்தின் வருவாய் 4 சதவீதம் அதிகமாக உள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660608

 

*******


(रिलीज़ आईडी: 1660676) आगंतुक पटल : 271
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Malayalam