மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

மத்திய மந்திரி திரு கிரிராஜ் சிங் “மத்ஸ்ய சம்பதா”-வை வெளியிட்டார்

Posted On: 30 SEP 2020 5:12PM by PIB Chennai

மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. கிரிராஜ் சிங் இன்று “மத்ஸ்ய சம்பதா” என்ற செய்தி மடலின் 2-வது பதிப்பையும், பிரதமரின் மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) பற்றிய பயனாளி கையேட்டையும் வெளியிட்டார். இது PMMSY திட்டத்தின் பல்வேறு கூறுகள் / செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை சமர்ப்பிக்கும் முறைகள் பற்றிய விரிவான விளக்கத்தை வழங்குகிறது, இது மீனவர்கள் மற்றும் இத்துறையில் உள்ள பிற பயனாளர்களுக்கு ஒரு மதிப்புமிக்க வளமாக இருக்கும். அனைத்து பயனாளிகள் மற்றும் பங்குதாரர்களுக்கும் PMMSY -வில் இருந்து நன்மைகளைப் பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ள அவர்களுக்கு உதவும் அனைத்தையும் உள்ளடக்கிய வழிகாட்டியாக இந்த" PMMSY -வின் பயனாளி கையேடு " செயல்படும் என்று திரு கிரிராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்ததுடன், மேலும் PMMSY-இன் வெவ்வேறு செயல்பாடுகளைப் பற்றி அறிந்து கொள்வதில் பயனாளிகளுக்கு இது ஒரு தவிர்க்க முடியாத கருவியாகவும் செயல்படும் என்றார்.

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660328

********

(Release ID: 1660328)



(Release ID: 1660567) Visitor Counter : 87