குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மட்பாண்டம் தயாரிக்கும் மின்சார சக்கரங்களை காந்திநகரில் உள்ள மட்பாண்டசமுதாய மக்களுக்கு விநியோகித்தார்

Posted On: 30 SEP 2020 3:49PM by PIB Chennai

மட்பாண்டம் தயாரிக்கும் விளிம்பு நிலை சமூகத்தை “சுயசார்பு” உடையதாக மாற்றுவதற்கான முயற்சியை மையமாகக் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா காந்தி நகர் மற்றும் அகமதாபாத்தில் உள்ள 2௦ கிராமங்களை சேர்ந்த 200 குடும்பங்களுக்கு 200 மட்பாண்டம் தயாரிக்கும் மின்சாரச் சக்கரங்களை காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தின் (KVIC) மட்பாண்டர்களுக்கு அதிகாரமளித்தல் திட்டத்தின் கீழ் விநியோகித்தார். திரு அமித் ஷா தனது நாடாளுமன்றத் தொகுதியில் (காந்திநகர் மக்களவை) மட்பாண்டம் தயாரிக்கும் மின்சாரச் சக்கரங்களை புதுதில்லியில் இருந்து காணொளிக் காட்சி மூலம் விநியோகித்தார்.

இந்த மட்பாண்டம் தயாரிக்கும் மின்சாரச் சக்கரங்களை விநியோகித்ததன் மூலம் இந்த சமூகத்தை சேர்ந்த 12000 உறுப்பினர்கள் பயனடைவர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தின் பல்வேறு திட்டங்களை பாராட்டினர். மேலும், காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தின் மூலம் 10 நாட்கள் மண்பாண்ட உற்பத்தி பயிற்சி பெற்ற நான்கு மண்பாண்ட கலைஞர்களுடன் உரையாடினார். அப்போது அந்த கலைஞர்கள், இந்த பயிற்ச்சியை அளித்ததற்கும்,மட்பாண்டம் தயாரிக்கும் மின்சாரச் சக்கரங்களைவழங்கியதற்கும் மத்திய அரசுக்கு  நன்றி தெரிவித்தனர். இது தங்களை சுய சார்பு கொண்டவர்களாக மாற்ற உதவும் என்று கூறினர்.

மண்பாண்ட பயன்பாட்டை உயர்த்தவும், பண்பாண்ட கலைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் மத்திய அரசு எடுத்துள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்துரைத்த அமைச்சர், “இந்திய ரயில்வே, குறிப்பிட்ட 400 ரயில் நிலையங்களில், உணவு மற்றும் பானங்களை விற்க மண் பாண்டங்கள் மட்டுமேபயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. நமது மண்பாண்ட கலைஞர்களுக்கு பெரிய சந்தைப்படுத்தல் தளத்தை வழங்குவதற்காக இதுபோன்ற மேலும் ரயில் நிலையங்களை அடையாளம் காணுமாறு ரயில்வே அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன்”, என்று அவர் தெரிவித்தார்.



(Release ID: 1660550) Visitor Counter : 146