ஆயுஷ்

ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த மகாத்மா காந்தியின் சிந்தனைகளுக்கு புத்தாக்கம் அளிக்க இணைய கருத்தரங்குகளின் நீண்ட வரிசை

Posted On: 30 SEP 2020 12:25PM by PIB Chennai

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம், புனே, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இயற்கை மருத்துவத்தை பற்றிய இணையக் கருத்தரங்குகளை நடத்த இருக்கிறது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மகாராஷ்டிரா மற்றும் கோவாவுக்கான கள மக்கள் தொடர்பு அலுவலகத்துடன் இணைந்து 48 நாட்களுக்கு இந்த இணையக் கருத்தரங்குகள் நடத்தப்படும்.

காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2 முதல் தேசிய இயற்கை மருத்துவ தினமான 2020 நவம்பர் 18 வரை நடத்தப்படவிருக்கும் இந்த இணையக் கருத்தரங்குகள், தற்சார்பு ஆரோக்கியம் மூலம் தற்சார்படைதல் குறித்த காந்தியடிகளின் தத்துவங்கள் மீது கவனம் செலுத்தும்.

ஒரு நாளும் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடக்கும் இந்த இணைய கருத்தரங்குகளை  https://www.facebook.com/punenin என்னும் இணைப்பில் காணலாம். முன்கூட்டியே பதிவு செய்ய தேவை இல்லை.

எளிதாகக் கிடைக்கும் இயற்கை மருத்துவப் பொருட்களின் மூலம் மக்கள் தங்களது ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வதன் அவசியத்தை இந்த இணையக் கருத்தரங்குகள் வலியுறுத்தும்.

செயல்முறை விளக்கங்களின் மூலம் இயற்கை மருத்துவ நடைமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த நிகழ்ச்சிகளின் நோக்கமாகும். உரையாடல்கள், விவாதங்கள் போன்ற பின்னூட்ட நிகழ்வுகளும் நடத்தப்படும்.

நாடு முழுவதிலும் இருந்து, நாட்டின் எல்லைகளை தாண்டியும் இந்த நிகழ்ச்சியில் பலர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து புகழ்பெற்ற அறிஞர்கள் மகாத்மா காந்தியின் சுகாதார சிந்தனைகளைப் பற்றி பேச அழைக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660260

 

******


(Release ID: 1660334) Visitor Counter : 189