பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிலவிய கச்சா எண்ணெயின் குறைவான விலையை சாதமாக்கி ரூ 5,000 கோடியை நாடு சேமித்தது: திரு தர்மேந்திர பிரதான்

Posted On: 29 SEP 2020 1:35PM by PIB Chennai

ஒருங்கிணைந்த எரிசக்தி பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கும் நமது முயற்சிகளுக்கு, மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அறைகூவல் விடுத்த தற்சார்பு இந்தியா இயக்கம் வலுவூட்டும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கூறினார்.

சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு குழு நடத்திய எரிசக்தி பாதுகாப்பு மாநாட்டில் இன்று பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார். எரிசக்தி துறையில் தற்சார்பை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிலவிய கச்சா எண்ணெயின் குறைவான விலையை சாதமாக்கி ரூ 5,000 கோடியை நாடு சேமித்தது என்று திரு தர்மேந்திர பிரதான் கூறினார்.

கச்சா எண்ணெய்க்காக வெளிநாடுகளை சார்ந்து இருப்பதை குறைப்பதற்கு ஐந்துமுனை திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்தி வருவதாக அமைச்சர் கூறினார்.

 

"கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில், பாதுகாப்பான, வலிமையான, தூய்மையான மற்றும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய எரிசக்தி அமைப்பை உருவாக்க நாங்கள் உறுதியாக உள்ளோம்," என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1659993

****



(Release ID: 1660036) Visitor Counter : 207