பிரதமர் அலுவலகம்
சிஎஸ்ஐஆரின் நிறுவன தினத்தை முன்னிட்டு அதன் பணியாளர்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
26 SEP 2020 2:44PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழுவின் (சிஎஸ்ஐஆர்) நிறுவன தினத்தை முன்னிட்டு அதன் பணியாளர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழுவோடு
இணைந்திருக்கும் அனைவருக்கும் அதன் நிறுவன நாளன்று வாழ்த்துகள். இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை முன்னெடுத்துச் செல்வதில் சிஎஸ்ஐஆர் முதன்மையாக உள்ளது. கொவிட்-19-ஐ எதிர்த்துப் போராடுவதிலும் சிறப்பான பங்களிப்பைத் தந்து வருகிறது. சிஎஸ்ஐஆரின் வருங்கால முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்," என்று கூறியுள்ளார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1659380)
வருகையாளர் எண்ணிக்கை : 162
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam